Latestமலேசியா

ஈப்போவில் ஓடும் MPV காரின் மேற்கூரையில் அமர்ந்த இரு சிறுமிகள் – போலீஸ் விசாரணை

ஈப்போ, செப்டம்பர் 3 – ஈப்போவில் ஓடிக்கொண்டிருந்த MPV காரின் மேற்கூரையில் இரு சிறுமிகள் அமர்ந்திருந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் முஹமட் நஜிப் ஹம்சா (Asisten Komisioner Muhammad Najib Hamzah) கூறுகையில், இதுவரை எந்தப் புகாரும் கிடைக்கவில்லை. எனினும், வாகனத்தின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

Toyota Alphard ரக அந்த MPV-யின் sunroof அதாவது மேற்கூறை வழியாக வெளியே வந்த சிறுமிகள், வாகனம் சென்று கொண்டிருந்தபோது காரின் மேல் தளத்தில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் Meru வெளியேறும் பாதை முதல் Jalan Jelapang-Simpang Pulai வரையிலான பகுதியில் நடந்ததாக நம்பப்படுகிறது.

சிறுமிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கு இணையப் பயனர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுமிகள் என உறுதி செய்யப்பட்டால், குழந்தைகள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!