
பாசிர் கூடாங், செப்டம்பர் 3 – மெர்டேக்கா நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, தங்களது வாடகை வீடு தீப்பிடித்த தகவல் கிடைத்ததால் 39 வயதான பெண்மணியும், அவரது கணவர் மற்றும் மூன்று வயது மகனின் கொண்டாட்டம் மிக சோகமாக மாறியது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள சமூக மண்டபத்தில் நிகழ்ச்சியில் இருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் தீயைக் கட்டுப்படுத்திய நிலையில், சமையலறை மற்றும் வீட்டின் மின்சாதனங்கள், மற்றும் இதர பொருட்கள் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
வேறு இடத்தில் வாடகைக்கு குடியேற வசதியில்லாததால், குடும்பம் சேதமடைந்த வீட்டிலேயே வசித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தொழிற்சாலை பணியாளராக உள்ளார். அவர்களின் மூன்று வயது மகனுக்கு இருதயம், கேட்கும் திறன் மற்றும் வலது கை தொடர்பான பாதிப்புகள் இருப்பதால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.



