Latestமலேசியா

மிகக் கடுமையான புகைமூட்டம்: சரவாக்கின் செரியான் பகுதியில் அவசரநிலை அறிவிப்பு

சரவாக், செப்டம்பர் 4 – சரவாக்கின் செரியான் முழுப் பகுதியிலும் அவசரநிலையை அறிவிக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.

கடுமையான புகைமூட்டம் காரணமாக காற்றின் தரம் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தான நிலையை எட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர், சரவாக் முதலமைச்சர் மற்றும் தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களின் ஆலோசனையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் நலனைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும், நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து, புகைமூட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் சுகாதார ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!