Latestமலேசியா

சிலாங்கூர் இந்தியச் சமூகத்திற்கு அரசு வேலை வாய்ப்புகள்: ‘Jalinan Mesra’ சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

ஷா ஆலாம், செப்டம்பர்-6,சிலாங்கூர் மாநில இந்தியச் சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் மலேசியப் பொதுச் சேவையில் இணைவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயா இந்து அரசுப் பணியாளர்கள் சங்கமான ‘இமையம்’, பூச்சோங் நாடாளுமன்றம் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்றத் தொகுதி ஆகியவை இணைந்து நடத்தும் இந்த ‘Jalinan Mesra’ தொழில் வழிகாட்டி முகாம், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்ரீ கெம்பாங்கான், ஜாலான் பெசாரில் உள்ள MBSJ பல்நோக்கு மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசமாகும்.

அரசு வேலைக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் நேர்காணலுக்கான தயார் நிலை குறித்து அரசுத் துறை பிரதிநிதிகள் நேரடி வழிகாட்டுதல் வழங்கவுள்ளனர்.

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணைப்பின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அல்லது திரையில் காணும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பதிந்துக்கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு,
சுமதி: 016-271 2241
இந்திராணி: 016-320 6940
கலா: 016-397 9875
சுமி: 017-641 3641

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!