Latestஇந்தியாஉலகம்மலேசியா

சாகிர் நாய்க் நாடு கடத்தல் விவகாரம்; மோடியுடன் பேசியதை அன்வார் உறுதிப்படுத்தல்

புது டெல்லி, செப்டம்பர்-13-இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICKS) உச்சநிலை மாநாட்டுக்கு இடையே, சர்ச்சைக்குரிய மத போதகர் Dr சாகிர் நாய்க்கை நாடு கடத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

​புது டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக, NDTV ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் இந்த விவகாரம் இரகசியமாக வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

​மேலும், சாகிர் நாய்க்கை நாடு கடத்தும் விவகாரத்தில் மலேசிய சட்ட முறைக்கு முன்னுரிமை அளித்து மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

​பணமோசடி மற்றும் வெறுப்புப் பேச்சு குற்றச்சாட்டுகளுக்காக இந்தியாவில் தேடப்பட்டு வரும் சாகிர் நாய்க், 2016-ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் நிரந்தர வசிப்பிட உரிமத்துடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!