Latestமலேசியா

ஆண்டிறுதி வரை மின் மானிய வரம்பு 800 kWh ஆக உயர்வு: அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

புத்ராஜெயா, செப்டம்பர்-18,மின்சாரக் கட்டணத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மின் மானியப் பாதுகாப்பை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.

​செப்டம்பர் முதல், மாதத்திற்கு 800 கிலோவாட்-மணி (kWh) வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு இந்த மானியப் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் இந்த வரம்பு 600 கிலோவாட்-மணியாக இருந்தது.

எனினும், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

​விரிவாக்கப்பட்ட மானியத்தின் மூலம், தகுதிபெறும் வீடுகளுக்கு AFA எனப்படும் தானியக்க எரிபொருள் கட்டண சரிசெய்தல்,
​சில்லறை விநியோகக் கட்டணங்கள் மற்றும்
​விற்பனை – சேவை வரி (SST)
​ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.

​தற்போதைய வெப்பமான வானிலை மற்றும் புகைமூட்டம் காரணமாக, பல வீடுகளில் குளிரூட்டி பயன்பாடு அதிகரித்து மின் கட்டணம் உயர்ந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!