Latestமலேசியா

பொலிவியாவில் புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு

லா பாஸ், செப்-18-பொலிவியாவின் மூடுபனி சூழ்ந்த காடுகளில் இதுவரை கண்டறியப்படாத புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளுக்கு மேலுக்குப் பிறகு புதிய காட்டுப் பூனை இனம் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.

உள்ளூர் மக்களால் ‘Tilkayo’ என அழைக்கப்படும் அச்சிறிய பூனை Yungas வனப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 46 சென்டிமீட்டர் நீளமும் 1.4 கிலோகிராம் எடையுடன் சாதாரண பூனையை விட சிறியதாக உள்ளது. மரபணு ஆய்வுகளின் அடிப்படையில் இதற்கு Leopardus tilcayo எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 38 காட்டுப் பூனைகளின் மரபணுக்களை ஆய்வு செய்ததில், புலிப் பூனைக் குழுவில் மரபணு ரீதியாக வேறுபட்ட ஐந்து இனங்கள் இருப்பது தெரிய வந்தது. அதில் Tilkayo, மற்ற இனங்களிலிருந்து சுமார் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கேமரா பதிவுகளின்படி Tilkayo இரவு நேரங்களில் அதிக சுறுசுறுப்பாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. அதன் மல மாதிரிகளில் சிறிய கொறித்துண்ணிகளின் எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கிடையில், பெருவின் Yungas பகுதியில் புதிய புலிப் பூனைத் துணை இனமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எனினும், அப்பூனைகளின் வாழ்விடங்கள் காடழிப்பு, விவசாய விரிவாக்கம், காட்டுத் தீ மற்றும் சுரங்கத் தொழில் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. எனவே, அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதுடன், அப்புதிய இனங்களின் பாதுகாப்பு நிலையை தனித்தனியாக மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!