Latestமலேசியா

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 12,575 பேர் காத்திருப்பு; சிறுநீரகத்திற்கு 23 ஆண்டுகள் வரை காத்திருக்கும் அவலம்

கோலாலம்பூர், செப்டம்பர்-19-நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 12,575 நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

​கடந்த ஜூலை மாதம் வரையிலான நிலவரப்படி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கே அதிகபட்சமாக 12, 228 பெரியவர்களும், 307 சிறுவர்களும் காத்திருப்பதாகத் தேசிய உறுப்பு மாற்று மையம் NTC தெரிவித்துள்ளது.

​தேசிய சிறுநீரகப் பதிவகத்தின் தரவுகளின்படி, சிறுநீரகம் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 5 முதல் 23 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

​இது தவிர, கல்லீரலுக்காக 16 பேரும், இதயத்திற்காக 14 பேரும் நுரையீரலுக்காக 3 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

​இதே காலக்கட்டத்தில், நன்கொடையாளர்களிடமிருந்து 235 உறுப்புகளும் திசுக்களும் மட்டுமே பெறப்பட்டுள்ளன; இதில் அதிகபட்சமாக 126 கண் விழிப்படலங்களும், 58 சிறுநீரகங்களும் அடங்கும்.

இவ்வேளையில், ​நாடு முழுவதும் இதுவரை 436,542 பேர் தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ளதாக NTC கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!