Latestமலேசியா

200 மில்லியன் ரிங்கிட் வரிச் சலுகை மோசடி: நிறுவன நிர்வாகி தடுத்து வைப்பு

புத்ராஜெயா, அக்- 2 – சுமார் 200 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வரிச் சலுகையைப் பெற போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகச் சந்தேகிக்கப்படும் நிதி மற்றும் பெருநிறுவனச் சேவைகள் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACCயின் விண்ணப்பதை ஏற்று அவரை நாளை வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

40 வயதுடைய அந்நபர், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டார்.

2018 முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அவ்வாடவர் வரிச் சலுகையைப் பெற அமலாக்க நிறுவன அதிகாரி ஒருவருக்கு கையூட்டு வழங்கியதுடன், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 480 நிறுவனக் கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அதன் மூலம் சொத்துகளைக் குவித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே அந்நபர் கைது செய்யப்பட்டதை MACC தலைமை ஆணையர் Datuk Seri Abd Halim Aman உறுதிப்படுத்தியுள்ளார். அச்சம்பவம் 2009 MACC சட்டத்தின் பிரிவு 16-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!