Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் பிகேஆரின் Lee Chean Chung

கோலாலம்பூர், அக்-2–பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Lee Chean Chung தாம் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பிகேஆர் கட்சியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது அந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், செப்டம்பர் 30 ஆம் தேதி தமது பிகேஆர் உறுப்பினர் தகுதி மூன்று ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். எனவே நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க விரும்பவில்லை எனவும் பதவியிலிருந்து நிபந்தனையின்றி விலக முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில் வரும் திங்கட்கிழமை தாம் பிகேஆர் கட்சியிலிருந்தும் விலகப் போவதாக Lee Chean Chung தெரிவித்தார். பிகேஆரின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநரான Lee, முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!