Latestமலேசியா

KESAS நெடுஞ்சாலையில் துணைப் பிரதமரின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பை நெருக்கமாகப் பின்தொடர்ந்த காரோட்டிக் கைது

ஷா ஆலாம், அக்டோபர்-8 – KESAS நெடுஞ்சாலையில், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் போலீஸ் பாதுகாப்பு வாகன அணிவகுப்பை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்த 27 வயது கார் ஓட்டுநர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

துணைப் பிரதமரை அழைத்துச் சென்ற வாகன அணிவகுப்பின் பின்னால், சம்பந்தப்பட்ட ஆடவர் தனது காரை ஓட்டிச் சென்றதாக போலீஸ் தெரிவித்தது.

பாதுகாப்பு வாகன அணிவகுப்பைப் பின்தொடர வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்திய போதிலும், அந்த ஓட்டுநர் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, அந்த ஆடவர் கைதுச் செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் போலீஸார் மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!