
ஜோகூர் பாரு, அக்டோபர்-9,ஜோகூர் பாருவில் உள்ள ஜோகூர் மிருகக்காட்சி சாலை அருகே, போலீஸார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொது மக்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Jalan Gertak Merah-வில், நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்ஷாட், சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கார் ஓட்டுநர் என நம்பப்படும் நிலையில், அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த மற்றொரு காருடன் மோதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மிருகக்காட்சி சாலைக்கு வந்திருந்த பார்வையாளர் ஒருவர், இரண்டு முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்து வாகனம் மோதும் சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சுல்தானா அமீனா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, மிருகக்காட்சி சாலைக்குச் செல்லும் சாலை மூடப்பட்டதோடு, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான முழு விவரங்களை இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடவிருப்பதாக டத்தோ அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.



