
கோத்தா பாரு, அக்-12-கடந்த வாரம் கிளந்தான் Keterehவில் தமது மனைவியைக் கத்தியால் குத்தியதுடன், மாமியாரையும் கத்தியால் தாக்கியதாக 47 வயதுடைய வேலையற்ற நபர் மீது இன்று கோத்தா பாரு sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் Shahrul Shahrizal Che Shaari எனும் அவ்வாடவர் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த திங்கட்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் Keterehவில் உள்ள ஒரு வீட்டில் 44 வயதான தமது மனைவி Zulaiha Mat Zinனைக் கத்தியால் குத்தி கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக Shahrul மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி தண்டனை விதிக்கப்படலாம்.
அதே சமயம் 78 வயதுடைய தமது மாமியாரைக் கத்தியால் காயப்படுத்தியதாக Shahrul மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபனமானால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
இதனிடையே, Shahrulலை மனநல மதிப்பீட்டுக்கு உட்படுத்துமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து, மனநல மதிப்பீட்டிற்காக அவரை ஒரு மாத காலத்திற்கு பேராக், உலு கிந்தாவில் உள்ள Bahamian மருத்துவமனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 18ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டது.



