Latestமலேசியா

ஜோகூரில் மின்சாரக் கம்பிகளைத் திருட முயன்ற ஆடவர் உயிரிழந்ததாகச் சந்தேகம்

ஜோகூர், அக்டோபர் 12 – ஜோகூர், கோத்தா திங்கி (Kota Tinggi), ஃபெல்டா அடேலா (Felda Adela) பகுதியிலுள்ள தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மின்மாற்றி நிலையம் அருகே ஆடவர் ஒருவர் இன்று (அக்டோபர் 12) சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

காலை 6.46 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மின்மாற்றி நிலையத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் தொலைவில் அவர் சடலமாகக் கிடந்ததைக் கண்டறிந்தனர்.

அவர் மின்சாரக் கம்பிகளைத் திருட முயன்றபோது உயிரிழந்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் சிறிய மண்வெட்டி, கம்பியில்லா அரவை இயந்திரம், சுத்தியல், குழாய் இறுக்கி மற்றும் தலைவிளக்கு உள்ளிட்ட கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கோத்தா திங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் யூசோப் ஒத்மான் (Yusof Othman) தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்காக சடலம் கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்வழக்கு தற்போது திடீர் மரண வழக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!