Latestமலேசியா

காலணிக்குள் போதைப்பொருள் கடத்தல்: 5 மலேசியர்கள் ஜப்பானில் கைது

ஜப்பான், அக்டோபர் 13 -ஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்தில், சுமார் 5 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக நான்கு ஆண்கள், ஒரு பெண் என ஐந்து மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 3.1 மில்லியன் ரிங்கிட்டாகும்.

அவர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து (KLIA) போதைப்பொருளைக் கொண்டு சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. காலணிகளின் உள்பகுதியில் தலா 500 கிராம் வீதம் இரு காலணிகளிலும் கொக்கைனை மறைத்து வைத்திருந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

24 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், டெலிகிராம் செயலி மூலம் போதைப்பொருளைக் கடத்த ஒவ்வொருவருக்கும் 8,000 ரிங்கிட் ஊதியம் வழங்க முன்வந்ததாகக் கூறியுள்ளார். நான்கு பேர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நிலையில், 25 வயதுடைய பெண் ஒருவர் தமக்கு போதைப்பொருள் இருந்தது தெரியாது எனக் கூறி குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இந்தக் கடத்தலின் பின்னணியில் மலேசியாவைத் தளமாகக் கொண்ட குற்றக் கும்பல் உள்ளதா என டோக்கியோ காவல்துறை விசாரித்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!