Latestமலேசியா

புக்கிட் மெர்தாஜாமில் 71 வயது மூதாட்டியை மிரட்டிய குற்றச்சாட்டு – 3 சிறுவர்களுக்குப் பிணை மறுப்பு

புக்கிட் மெர்தாஜாம், அக்டோபர் 30 – 71 வயது மூதாட்டியை மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 மற்றும் 12 வயதுடைய மூன்று மியன்மார் சிறுவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால், அவர்கள் நவம்பர் 10ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவர்.

இன்று புக்கிட் மெர்தாஜாம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, மூன்று சிறுவர்களும் குற்றத்தை மறுத்தனர்.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி மாலை 6 மணியளவில், தாமான் ஸ்ரீ ரம்பாய் பகுதியில் துடைப்பான், இரும்புக் கம்பி, வெள்ளை நிற மின்விளக்குக் குழாய் மற்றும் கற்களைப் பயன்படுத்தி மூதாட்டியை மிரட்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்நிலையில், சிறுவர்களின் வயது மற்றும் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிணை மறுக்கப்பட்டது.

குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும், குற்றச்சாட்டுகளை மீண்டும் வாசித்துக் கூற மியன்மார் மொழிபெயர்ப்பாளரை நியமிக்கவும் நவம்பர் 10ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!