Latestமலேசியா

பூச்சோங்கில் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட கோழிகள் ஹலால் உணவகங்களுக்கு விநியோகமா? 6.5 டன் கோழி இறைச்சி பறிமுதல்!

ஷா ஆலாம், நவம்பர்-1-சிலாங்கூர், பூச்சோங்கில் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட கோழிகள், முஸ்லீம்களுக்குச் சொந்தமான உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றமான MAIS மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கோழிகளை அறுப்பதற்கு முன்பே அவற்றை அதிக மின்னழுத்தம் கொண்ட நீரில் மூழ்கடித்துக் கொன்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்லாமிய முறைப்படி உயிருள்ள கோழிகளையே அறுக்க வேண்டும் என்பதால், இந்த நடைமுறை ஹலால் விதிமுறைகளை மீறுவதாக MAIS தலைவர் டத்தோ சாலேஹுடின் சைடின் (Salehuddin Saidin) தெரிவித்தார்.

2004-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் அந்தக் கோழிப் பதப்படுத்தும் மையம், முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமானது என நம்பப்படுகிறது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 85,400 ரிங்கிட் மதிப்பிலான 6.5 டன் கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதுடன், 12 வெளிநாட்டவர்களும் கைதுச் செய்யப்பட்டனர்.

விசாரணைக்காக அம்மையத்தை இரு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கிருந்து கோழிகளைப் பெறும் உணவகங்கள் உடனடியாக அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும் சாலேஹுடின் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!