Latestமலேசியா

புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; வணக்கம் மலேசியா வருகையில் ஊடகங்களுக்கு ஃபாஹ்மி வலியுறுத்து

ஊடகங்கள் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம்; வணக்கம் மலேசியா வருகையின் போது ஃபாஹ்மி வலியுறுத்தல்

கோலாலம்பூர் நவ 4: மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஊடக நிறுவனங்கள் தங்களது வணிகத்தைத் தக்கவைத்துக்கொள்ள புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம் எனத் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் வலியுறுத்தினார்.

இன்று வணக்கம் மலேசியா அலுவலகத்திற்கு சிறப்பு வருகை புரிந்த அவர், அதன் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி மேற்கொண்ட சிறப்பு நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

ஊடகத்துறை எதிர்நோக்கும் மாற்றங்கள் குறித்துப் பேசிய ஃபாஹ்மி, தொடர்ந்து செயல்படவும் வளர்ச்சி பெறவும் புதிய வருவாய் வாய்ப்புகளையும் வணிக அணுகுமுறைகளையும் ஊடக நிறுவனங்கள் ஆராய வேண்டியதன் தேவையை எடுத்துரைத்தார்.

மேலும், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்தும் பொதுமக்கள் அதனை விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் பயன்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். பிள்ளைகளின் சமூக ஊடக பயன்பாட்டில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, தனது தீபாவளி அனுபவங்களையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட ஃபாஹ்மி, வணக்கம் மலேசியா ஊடக பணியாளர்களுக்கும் தீபாவளியைக் கொண்டாடும் பொதுமக்களுக்கும் தனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!