Latestமலேசியா

மதம் சாராத சடங்கில் பங்கேற்ற முஸ்லிம் இளைஞருக்கு 3 மாதங்கள் சமய மறுவாழ்வு பயிற்சி

சிலாங்கூர், நவம்பர் 4 – பிற மதத்தின் சடங்கில் பங்கேற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட 21 வயது முஸ்லிம் இளைஞர் Aliff Daniel Adli, மூன்று மாதங்கள் சமய மறுவாழ்வு பயிற்சி பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த இளைஞர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டபோது நீதிபதியின் முன்னிலையில் அவர் அக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இரவு, பத்துமலை கோயிலில் பிற மதத்தின் சமயப் பொருட்களை ஏந்தியதுடன், உடலில் துளையிட்டு சடங்கு செய்ததாகவும், சிலை முன்பு மண்டியிட்டு வழிபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து, இன்று முதல் உலு யாம் பகுதியிலுள்ள Baitul Iman சமய நம்பிக்கை மறுவாழ்வு மையத்தில் மூன்று மாதங்கள் பயிற்சி பெற உத்தரவிடப்பட்டது.

அவரது இளம் வயது மற்றும் தாயைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்குப் பதிலாக மறுவாழ்வு பயிற்சி வழங்க நீதிமன்றம் முடிவு செய்தது.

மேலும், அவர் உண்மையான மனமாற்றத்துடன் தனது தவறுக்காக மனம் திருந்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

மறுவாழ்வு பயிற்சியின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!