Latestமலேசியா

நீலாயில் வைரலான வீடியோ; மாணவருக்கு 3 வகையான போதைப்பொருட்கள் இருப்பது பரிசோதனையில் அம்பலம்

நீலாய், நவம்பர்-6,நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர் ஒருவர், 3 வகையான போதைப்பொருட்களுக்கு நேர்மறை (positive) சோதனை முடிவைப் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது அம்மாணவரின் சிறுநீர் மாதிரியைப் பரிசோதித்ததில், ketamine, benzodiazepines மற்றும் THC ஆகிய 3 வகையான போதைப்பொருட்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

வகுப்பறையில் அந்த மாணவர் மயக்க நிலையில் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளமான Threads-ஸில் பரவியதைத் தொடர்ந்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.

அக்டோபர் 28-ஆம் தேதி நீலாயில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்பகட்ட சிறுநீர் பரிசோதனை முடிவுகள் இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ Alzafny Ahmad தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மாணவர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைக்காக தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK-விடம் பரிந்துரைக்கப்படுவார் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!