Latestமலேசியா

அந்தோணி லோக்கிற்குப் பதிலாக புதிய அமைச்சரை நியமிக்கும் முடிவை பிரதமரிடமே விட்டுவிடுகிறது DAP

கோலாலம்பூர், நவ 12-போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்குப் பதிலாக புதிய அமைச்சரை நியமிப்பது தொடர்பான முடிவை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடமே விட்டுவிட்டதாக ஜனநாயக செயல் கட்சியின் (DAP) தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்திருக்கிறார்.

அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே இருக்கிறது. போக்குவரத்து அமைச்சைத் திறம்பட வழிநடத்துவதற்கு யார் பொருத்தமானவர் அல்லது புதிய அமைச்சரை நியமிக்க வேண்டுமா என்பதைப் பிரதமரே தீர்மானிப்பார் என அவர் கூறினார்.

அந்தோணி லோக்கிற்குப் பதிலாக நியமிக்கப்படக்கூடியவர்களின் பட்டியலை DAP சமர்ப்பித்துள்ளதா அல்லது பிரதமர் அத்தகைய பட்டியலைக் கேட்டுள்ளாரா என்ற கேள்விகளுக்கு கோபிந்த் நேரடியான பதிலை அளிக்கவில்லை. அவ்விவகாரம் முழுமையாகப் பிரதமரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் வீட்டுக் காவல் உத்தரவு நடைமுறைக்கு வரும்போது, தாம் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னதாக அந்தோணி லோக் அறிவித்திருந்தார்.

இவ்வேளையில், நஜிப்பின் வீட்டுக் காவல் விவகாரம் தொடர்பாக மலேசிய வழக்கறிஞர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவை தேசிய சட்டத்துறை அலுவலகம் எதிர்ப்பது குறித்து கருத்து தெரிவித்த கோபிந்த், அவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், சட்ட நடைமுறைகள் அதன் போக்கில் தொடரட்டும் என்றும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!