Latestஉலகம்

நியூ யோர்க்கில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது; 8 பேர் பலி, 18 பேர் காயம்

நியூ யோர்க், நவம்பர்-13,அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் 3 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 2 சிறுவர்கள் உட்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 18 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 4 தீயணைப்பு வீரர்களும் அடங்குவர்.

Brooklyn பகுதியில் உள்ள குடியிருப்பில் புதன்கிழமை மாலை இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

கட்டடத்திற்கு அருகிலுள்ள இடத்தில் நிலம் தோண்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 250 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அருகிலுள்ள கட்டுமானத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பற்ற பணிகளே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நியூயார்க் மேயர் Zohran Mamdani, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய சுமார் 100 கட்டுமானத் தளங்களிலும் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!