Latestமலேசியா

மலையேற்றத்தின்போது தேனீ கொட்டியதில் மயக்கமடைந்த வயது முதிர்ந்த பெண்

புக்கிட் மெர்தாஜாம், நவ13-பினாங்கு, Bukit Sungai Lembu பகுதியில் நேற்று தேனீ கொட்டியதாகக் கருதப்படும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் மயக்கமடைந்தார். அந்த 72 வயது மாது மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று மாலை 4.35 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, புக்கிட் மெர்தாஜாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார்.

பொதுமக்களின் உதவியுடன் மலையடிவாரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடல் மற்றும் மீட்புப் பணியின்போது, மாலை 6.40 மணியளவில் அம்மாது கண்டுபிடிக்கப்பட்டார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததால், தீயணைப்புப் படையினர் அவரை மலையடிவாரத்திற்குக் கொண்டு வந்து மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவர் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மீட்புப் பணியில் மேற்பார்வையாளர் உட்பட நான்கு தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில், காவல்துறை மற்றும் பொது தற்காப்புப் படையினரும் உதவினர். இரவு 8.46 மணியளவில் மீட்பு நடவடிக்கை அனைத்தும் நிறைவடைந்ததாக John Sagun Francis கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!