
இஸ்தான்புல், நவம்பர் 13 – துருக்கியின் கிழக்குப் பகுதியிலுள்ள மலாத்யா (Malatya) மாவட்டத்தில், நேற்று இராணுவத்துக்குச் சொந்தமான S-70 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென துருக்கி பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் உள்ளூர் நேரப்படி மாலை 6.45 மணியளவில் யெஷில்யுர்ட் (Yesilyurt) பகுதியில் விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து தீப்பற்றியது.
தீ அணைக்கப்பட்ட பின்னர் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. உயிரிழந்த வீரர்களுக்கு துருக்கி துணை அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.



