
புத்ராஜெயா, நவம்பர்-15,இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 52, 585 வெளிநாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மலேசியக் குடிநுழைவு இலாகா JIM நாடு முழுவதும் மேற்கொண்ட 11, 808 அமுலாக்க நடவடிக்கைகளில், 70, 195 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதே காலக்கட்டத்தில், 155, 498 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக JIM தலைமை இயக்குநர் டத்தோ சக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
இதனிடையே, புலம்பெயர்ந்தோர் தாயகம் திரும்பும் திட்டமான PRM 2.0-டின் கீழ், 328, 744 பேர் பதிவுச் செய்துள்ளனர்.
அவர்களில் 243, 501 பேர் இதுவரை தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் சக்காரியா கூறினார்.
முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது, அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி நாட்டில் இருப்பது உள்ளிட்ட குடிநுழைவுக் குற்றங்களைக் கட்டுப்படுத்த, அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் சக்காரியா தெரிவித்தார்.



