Latestமலேசியா

5 மாநிலங்களில் வெள்ளத்தால் 2,429 பேர் பாதிப்பு – 27 தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் ஐந்து மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 701 குடும்பங்களைச் சேர்ந்த 2,429 பேர், இன்று காலை 7 மணி நிலவரப்படி 27 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு 2,232 பேர் 24 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சமூக நலத்துறையின் (JKM) வெள்ளப் பேரிடர் தகவல் இணையதளத்தின்படி, சிலாங்கூர், பேராக், சரவாக், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய ஐந்து மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சிலாங்கூரில் அதிகபட்சமாக 423 குடும்பங்களைச் சேர்ந்த 1,609 பேர், குவாலா சிலாங்கூர், கிள்ளான், குவாலா லங்காட் மற்றும் கோம்பாக் மாவட்டங்களில் உள்ள 12 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பேராக்கில் 239 குடும்பங்களைச் சேர்ந்த 683 பேர், லாருட், மாத்தாங், செலாமா, மஞ்சோங், கெரியான், ஹிலிர் பேராக் மற்றும் பேராக் தெங்கா (Larut, Matang dan Selama, Manjung, Kerian, Hilir Perak, Perak Tengah) ஆகிய மாவட்டங்களில் உள்ள 9 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். நெகிரி செம்பிலானில் போர்ட் டிக்சன் மாவட்டத்தில் உள்ள ஒரு நிவாரண மையத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேவேலை, மலாக்காவில், மெலகா தெங்கா (Melaka Tengah) மற்றும் அலோர் காஜா மாவட்டங்களில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் 29 பேர் தங்கியுள்ளனர்.

இதற்கிடையில், சரவாக்கில் பெத்தோங் மற்றும் மிரி (Betong dan Miri) மாவட்டங்களில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் தங்கியுள்ளனர். மொத்தமாக, வெள்ளப் பாதிப்புக்குள்ளானவர்களில் 1,509 பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆவர். இவர்களில் 236 பேர் மூத்த குடிமக்கள். மேலும், 851 சிறுவர்களும் 69 கைக்குழந்தைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!