
கோலாலம்பூர், நவம்பர்-21,கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட்டில், மோட்டார் சைக்கிள் கும்பல் துரத்தியதால் பதற்றமடைந்து, Toyota Hilux பிக்கப் வாகனத்தைச் சாலையின் எதிர் திசையில் ஓட்டியதாகக் கூறப்படும் 33 வயது ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணிக்கு மேல் இச்சம்பவம் நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல், அந்த Hilux வாகனத்தைத் துரத்தியதோடு, சிலர் தலைக்கவசங்களால் வாகனத்தைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றபோது பதற்றமடைந்து, வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாக ஓட்டுநர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரது வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றை மோதிய பின்னர், சாலைத் தடுப்பிலும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநரின் முகம், உடல் மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டன.
அவரிடம் நடத்தப்பட்ட மதுபோதை மற்றும் சிறுநீர் பரிசோதனைகளில் எதிர்மறையான முடிவுகள் கிடைத்துள்ளன.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் கும்பல் Hilux வாகனத்தைத் துரத்தும் வீடியோக்கள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகின.



