Latestமலேசியா

காஜாங்கில் மலையை ஆக்கிரமித்து விளையாட்டு மைதானங்கள் அமைத்த வெளிநாட்டினர்

காஜாங், நவம்பர் 23 – காஜாங்கில் தொழிற்பேட்டைக்கு அருகிலுள்ள மலைப்பகுதியை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குழுவொன்று கடந்த மூன்று ஆண்டுகளாக ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக விளையாட்டு மைதானங்களை அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த புதர்களால் சூழப்பட்டிருந்த இப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு, சிறிய கால்பந்து, கைப்பந்து மற்றும் (Sepak Takraw) மைதானங்களாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஓய்வெடுப்பதற்காகச் சிறிய குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வங்காளதேசம், மியன்மார் மற்றும் நேப்பாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் இங்கு விளையாடுவதற்காகக் கூடுவதாக அருகிலுள்ள தொழிற்சாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அப்பகுதியில் பிளாஸ்டிக் பொட்டலங்கள், குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட குப்பைகள் வீசப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், சில வெளிநாட்டினர் முறையான பயண ஆவணங்கள் அல்லது வேலை அனுமதியின்றி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, பலர் மலைப்பகுதிக்குள் ஓடித் தப்பியதாகவும் கூறப்பட்டது. நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு அருகில் இப்பகுதி அமைந்துள்ளதால் பாதுகாப்பு குறித்த கவலையும் எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்மான் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!