Latestமலேசியா

மலேசியா அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு ஜிஎம்டி (GMT) வருவாயைச் சேகரிக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர், நவ.23-மலேசியாவில் உலகளாவிய குறைந்தபட்ச வரி (GMT) கடந்த 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த போதிலும், அதன் மூலம் கிடைக்கும் வரி வருவாய் வசூல் 2027 ஜூன் மாதத்தில்தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை நிதி அமைச்சர் Liew Chin Tong அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

கூடுதல் வரி செலுத்த வேண்டிய பன்னாட்டு நிறுவனங்களின் நிதி அறிக்கைக் காலத்தைக் கருத்தில் கொண்டு அக்கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்குக் காலம் முடிவடைந்த 18 மாதங்களுக்குள் நிறுவனங்கள் வரியைத் தாக்கல் செய்து செலுத்த வேண்டும் என அவர் விளக்கினார்.

இதுவரை GMT மூலம் எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் Lim Guan Eng எழுப்பிய கேள்விக்கு Liew அவ்வாறு பதிலளித்தார். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) வரி சீர்திருத்தக் கட்டமைப்பின் கீழ் 135க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அதிகார வரம்புகள் அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 2026 நிலவரப்படி, சுமார் 65 நாடுகள் மற்றும் அதிகார வரம்புகள் GMT விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. ஆண்டுக்கு 750 மில்லியன் யூரோ அல்லது அதற்கு மேல் உலகளாவிய வருவாய் ஈட்டும் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், தாங்கள் செயல்படும் நாடுகளில் குறைந்தபட்சம் 15 விழுக்காடு பயனுள்ள வரி விகிதத்தைச் செலுத்துவதை உறுதிப்படுத்துவதே அத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் வரிப் பொறுப்புகளை நியாயமான முறையில் நிறைவேற்றுவதுடன், சர்வதேச அளவில் சமநிலையான வரி முறையை உருவாக்கவும் முடியும் என்று Liew சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!