Latestமலேசியா

மூர்க்கத்தனமாக செயல்பட்ட முதியவரைப் பிடிக்கும் முயற்சியின் போது காயமடைந்தார் காவல்துறை வீரர்

சுங்கை பெசார், நவ.24-சிலாங்கூர், Sungai Panjangங்கில் உள்ள வீடொன்றில் மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட முதியவரைக் கைது செய்ய முயன்றபோது, காவல்துறை வீரர் ஒருவர் காயமடைந்தார். Sabak Bernam மாவட்டக் காவல் தலைமையகத்தின் குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க அந்த வீரருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

அச்சம்பவம் குறித்து நேற்று நண்பகல் 12.09 மணிக்குத் தகவல் கிடைத்ததாக மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Md Yusof Ahmad தெரிவித்தார். அதனை அடுத்து நடமாடும் ரோந்து வாகனப் பிரிவு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

அங்கு மூர்க்கத்தனமாகக் காணப்பட்ட முதியவரைக் கைது செய்ய முயன்றபோது அக்காவல் வீரர் காயமடைந்தார். அவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.

இவ்வேளையில், வேலையில்லாத சம்பந்தப்பட்ட முதியவர் கைது செய்யப்பட்டு மருத்துவப் பரிசோதனை மற்றும் மதிப்பீட்டிற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இதற்கு முன்பு குற்றப் பின்னணியோ போதைப்பொருள் தொடர்பான குற்றப்பதிவுகளோ இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

விசாரணைக்கு உதவும் வகையில் அவர் நான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 324ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!