Latestமலேசியா

பினாங்கில் பாதி புதைந்த நிலையில் மீட்கப்பட்ட ஆடவர்; தலையில் தாக்கப்பட்டதால் உயிரிழப்பு

நிபோங் திபால், நவம்பர் -25,பினாங்கு, நிபோங் திபாலில் பாதி உடல் சேற்றில் புதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆடவர், தலையில் மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செபராங் ஜெயா மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் அது தெரியவந்ததாக தென் செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் Jay January Siowou தெரிவித்தார்.

நேற்றிரவு சுமார் 11 மணியளவில், ஜாலான் பைராமிலுள்ள (Jalan Byram) கம்போங் பாருவில் நீர்ப்பாசனக் கால்வாயின் கரையோரத்தில் அந்த ஆடவரின் சடலத்தைப் பொது மக்கள் கண்டனர்.

சம்பவ இடத்திற்கு அருகில் இரத்தக் கறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுவரை உயிரிழந்த ஆடவரின் அடையாளமோ, இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களின் அடையாளமோ கண்டறியப்படவில்லை.

கொலைக்கான நோக்கத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கைது செய்யவும் போலீஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் போலீஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!