Latestமலேசியா

API குறியீடு 400-ரை தாண்டினாலே அவசர நிலையை அறிவிக்கத் தயார்; அரசாங்கம் அறிவிப்பு

குவாலா பெராங், செப்டம்பர்-6,காற்றின் தரம் மோசமடைந்து, காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு (API) 400-ரைத் தாண்டினாலே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது.

​இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஸ்ரீ Arthur Joseph Kurup இதனைத் தெரிவித்துள்ளார்.

​சரவாக்கின் செரியான் மாட்டத்தில் API குறியீடு 500-ரைக் கடந்ததை அடுத்து, அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவே இந்நடவடிக்கை எனக் கூறினார்.

​அவசரநிலை காலக்கட்டத்தில் பள்ளிகள் மூடப்படுவதுடன், சுவாசக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும் என்றார் அவர்.

​இதனிடையே, சரவாக், கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் செயற்கை மழையைப் பொழிய வைக்கும் நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!