
கோலாலம்பூர், ஆகஸ்ட்-31,DUKE நெடுஞ்சாலையில் உள்ள டூத்தா டோல் சாவடி மற்றும் Bamboo Hills பகுதிக்கு அருகே அமைந்த சந்தேகத்திற்குரிய தொழிற்சாலை அல்லது கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் வெடிப்பும் தீ விபத்தும் ஏற்பட்டது.
அதிகாலை 4.10 மணியளவில் இரண்டு பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, தீயணைப்பு வாகனங்களும் அம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்து சம்பவ இடத்தைச் சென்றடைந்தன.
காலை 5 மணி வரை தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததாக The Sun செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்காவது காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.



