Latestமலேசியா

Faisal Halim மீதான எரிதிராகத் தாக்குதல்; கைவிரல் ரேகை மூலம் முக்கியச் சந்தேக நபரை நெருங்கும் போலீஸ்

கோலாலம்பூர், மே-10, கோத்தா டாமான்சாராவில் உள்ள பேரங்காடியில் வைத்து தேசியக் கால்பந்து நட்சத்திரம் Faisal Halim மீது எரிதிராவக வீச்சு நடத்தியவனை, போலீஸ் நெருங்கி வருகிறது.

தாக்குதலுக்கு முன்பு அப்பேரங்காடியில் நடமாடிய போது சில இடங்களில் அவனது கைவிரல் ரேகை பதிவாகியுள்ளது CCTV கேமரா வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விரல் ரேகைகளைப் பதிவுச் செய்து கொண்ட போலீசார், கைவிரல் ரேகை நிபுணர்களின் பரிசோதனை முடிவுக்குக் காத்திருப்பதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குனர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain கூறினார்.

நேற்று மாலை சம்பவ இடத்திற்கு நேரில் வருகை மேற்கொண்டு கண்காணித்த பிறகு அவர் அவ்வாறு சொன்னார்.

இப்புதியத் தடயம், முக்கியச் சந்தேக நபர் விரைவிலேயே பிடிபடுவான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

இவ்வேளையில், அச்சம்பவம் தொடர்பில் புதிதாக ஒருவர் கைதாகியிருப்பதாக இணைய ஊடகமொன்று வெளியிட்டச் செய்தியை Datuk Seri Suhaily மறுத்தார்.

எதுவாக இருந்தாலும் போலீசே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்; எனவே அவர் சொன்னார் இவர் சொன்னார் என மேற்கோள் காட்டி உறுதிபடுத்தப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம் என Suhaily கேட்டுக் கொண்டார்.

Faisal Halim மீதான தாக்குதல் தொடர்பில் இதுவரை இருவர் கைதாகி, அதில் ஒருவருக்கு சம்பந்தமில்லை எனக் கூறி அவர் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!