Latestஅமெரிக்காஉலகம்

flydubai கேப்டனைத் தாக்கிய துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பா? ட்ரம்ப் பரபரப்பு கூற்று

வாஷிங்டன், அக்டோபர்-2,flyDubai விமானத்தில் இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை (Smit Machchhar) கத்தியால் குத்தி, விமானத்தைக் கவிழ்க்க முயன்ற ஓமான் நாட்டைச் சேர்ந்த துணை விமானிக்கு ஈரானுடன் தொடர்பிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார் .

​வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்குக் கிடைத்துவரும் ஆரம்பகட்ட தகவல்களின்படி இந்த சதியில் ஈரானின் பின்னணி இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும், இது உறுதியானால் ஈரான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

​டெல் அவிவ் நோக்கிச் சென்ற அந்த விமானத்தில் சுமார் 180 பயணிகள் இருந்த நிலையில், நடுவானில் நடந்த இந்தத் தாக்குதலை முறியடித்து கேப்டன் ஸ்மித் மச்சார் விமானத்தைக் காப்பாற்றினார்.

​ட்ரம்ப் இவ்வாறு கூறியிருந்தாலும், முதற்கட்ட விசாரணைகளில் ஈரானுடன் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அந்த நபர் தனியாகவே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேலிய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​கைதுச் செய்யப்பட்ட துணை விமானி சவூதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசு அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் தற்போது அபுதாபி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!