Latestமலேசியா

Grasp Software Solutions Sdn Bhd, ஏற்பாட்டில் கியோஸ் மோபைல் செயலி ஜோகூர் பாரு ராஜ மாரியம்மன் தேவஸ்தானத்தில் தொடங்கியது

ஜோகூர் பாரு , பிப் 19 – மலேசியாவில் உள்ள கோவில்களில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தன்னியக்கத்தின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தும் ஒரு வரலாற்று முன்முயற்சியாக கியோஸ் (KIOSK) மற்றும் மொபைல் ஆப் (APP) செயலி பயன்பாட்டு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை ஜோகூர் பாரு ராஜமாரியம்மன் ஆலயத்தில் தொடங்கியது. மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்  தீர்வுகளில் முன்னோடி நிறுவனமான மலேசியாவில் முதல் கோயில் கோவில் நிர்வாக அமைப்பை (Temple Management System) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி கோவிலுக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக கோவிலில் கியோஸ்க் (Kiosk) மற்றும் அதிநவீன செயலி (App) ஆகியவற்றை இணைக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவை ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கே. ரவின் குமார் அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தான பி.கோவிந்தசாமி பிள்ளை திருமண மண்டபத்தில் தொடக்கிவைத்தார்.

Grasp Software Solutions Sdn Bhd இயக்குனர், டாக்டர் கோவிந்தராஜ் செல்வம் கூறுகையில், தற்போது 50 செயல்பாடுகளை கொண்ட இந்த முறை , மலேசியாவில் உள்ள கோவில்களில் வழங்கப்படும் நிர்வாகப் பணிகள் மற்றும் சேவைகளில் புதுமையை கொண்டு மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மென்பொருள் இதுவாகும் என்றார். இந்த கோயில் நிர்வாக அமைப்பு மூலம், பிரார்த்தனை தொடர்பான செயல்பாடுகள் , மண்டப வசதிகளை முன்பதிவு, நன்கொடைகளை ஏற்றுக்கொள்வது, கணக்கியல் மேலாண்மை, உறுப்பினர் பதிவு, சொத்து மேலாண்மை போன்றவற்றை செய்ய முடியும் என்று கூறினார். ஒவ்வொரு கோயிலின் தேவைக்கேற்ப கோயில் நிர்வாக அமைப்பு மென்பொருள் உருவாக்கப்படும் என்ரார் அவர்.

இதனிடையே, அருள்மிகு ராஜமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர், V . Raja Selan கூறுகையில், “எங்களுடைய சொந்த ராஜமாரியம்மன் செயலி மற்றும் கியோஸ்க் சிஸ்டம் (kiosk system), பிரார்த்தனை விழாக்களுக்கு வசதியாக சுய சேவை இயந்திரம் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைவதாக தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!