Latestமலேசியா

KLIA சம்பவம்: அரசு எடுக்கும் முடிவை ஏற்கத் தயார் – ஷுஹைலி

கோலாலம்பூர், அக்டோபர் 1 – KLIA டெர்மினல் 1-ல் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அரசு எடுக்கும் எந்த முடிவையும் ஏற்கத் தயாராக இருப்பதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸைன் (Datuk Seri Mohd Shuhaily Mohd Zain) தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் விளக்கம் அளித்துவிட்டதாக அவர் கூறினார். தன்னுடைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இருவரிடம் ஒருவர் கடுமையாக நடந்துகொள்வது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், ஒருவரின் காதைப் பிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றுள்ளது. தமக்கும் அந்த நபர்களுக்கும் இடையே உடல் தொடர்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகளே முடிவு செய்ய வேண்டுமென்று ஷுஹைலி கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தக் காணொளி தமது பெயருக்கும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தமது குழுவும் போலீஸ் புகார் செய்துள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!