Latestமலேசியா

KLIA2 விமான நிலையத்தில் விரைவில் AI தொழில்நுட்பம் ; தென்கிழக்காசியாவில் மேம்பட்ட விமான நிலையமாக உருவாக்கும் முயற்சி

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், விரைவில் AI செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட போக்குவரத்து மையமாக மாறவுள்ளது.

அதன் வாயிலாக, தென்கிழக்கு ஆசியாவில், அதி நவீன மேம்படுத்தப்பட்ட விமான நிலையமாக அதனை தரம் உயரும்.

இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி, KLIA2 விமான நிலையத்தை நிர்வகித்து வரும் ARS – Asia Success Resources நிறுவனம் அத்திட்டதை மேற்கொள்கிறது.

அந்த மாற்றம், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் என்பதோடு, பயணிகளுக்கு சிறந்த, முழுமையான, நெருக்கடி இல்லாத சேவையை வழங்கவும் உதவுமென ARS தலைமை செயல்முறை அதிகாரி ஆ
ஏரன் சுவா நம்பிக்கை தெரிவித்தார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில், ARS நிறுவனம் 35 லட்சம் ரிங்கிட் நிதியை முதலீடு செய்துள்ளது.

செயல்திறனை மேம்படுத்தவும், ஒருங்கிணைந்த டிக்கெட் விற்பனை முறையை உருவாக்கவும், AI செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பொருத்தவும் அந்நிதி பயன்படுத்தப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!