Latestமலேசியா

KTM Komuter சேவைக்கும் RM30 மாதாந்திர போக்குவரத்து மானியம்; சிலாங்கூர் அரசு அறிவிப்பு

ஷா ஆலாம், அக்டோபர்-2,சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் மாதாந்திர 30 ரிங்கிட் பொதுப் போக்குவரத்து மானியத் திட்டம், இனி KTM Komuter இரயில் சேவைக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

​கிள்ளான் பள்ளத்தாக்கு, வட பகுதி மற்றும் தெற்கு பகுதி Komuter வழித்தடங்களில் பயணிப்பவர்கள் இந்தச் சலுகையைப் பெறலாம் என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Ng Sze Han தெரிவித்துள்ளார்.

​வரும் டிசம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும் இத்திட்டம் மூலம் சுமார் 50 ஆயிரம் பயணிகள் பயனடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் பதிவுச் செய்த வாக்காளர்கள் மட்டுமே இந்த மானியத்தைப் பெறத் தகுதியுடையவர்கள்; எனினும் அவர்களது தற்போதைய வசிப்பிடம் அல்லது பணிப் புரியும் இடம் இதில் கருத்தில் கொள்ளப்படாது என்றார் அவர்.

​தகுதியுள்ள பயணிகள் NINE செயலி வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம்.

​விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவுடன், பயனர்களின் NINE e-wallet-ட்டில் 30 ரிங்கிட் வைக்கப்படும்.

அதனைக் கொண்டு KTMB Mobile அல்லது KITS Style செயலிகள் வழியாக Komuter இரயில் பயண டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!