Latestமலேசியா

Kuala Kubu Baharu இடைத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பான் நாளை இரவு வேட்பாளரை அறிவிக்கும்

கோலாலம்பூர், ஏப் 23 – சிலங்கூரில் Kula Kubu Baharu  சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளரை  நாளை இரவு பக்காத்தான் ஹராப்பான  அறிவிக்கும்.  நாளை புதன்கிழமை இரவு  8 மணிக்கு   Kuala Kubu Baharu   சட்டமன்ற உறுப்பினரின் சேவை மையத்தில்  வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என  Kuala Kubu Baharu இடைத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான்  தேர்தல்   இயக்குநர் Ng Sze Han ஊடகங்களுக்கு  வெளியிட்ட அழைப்பில் தெரிவித்திருக்கிறார்.  இந்த இடைத் தேர்தலில்  பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கான வேட்பாளரை  நிறுத்தும்  பொறுப்பு  DAPயிடம் இருப்பதாக இதற்கு முன்  Keadilan துணைத்தலைவர் Nik Nazmi Nik Ahmad  கூறியிருந்தார். 

 எனினும் ஒற்றுமை அரசாங்கம்  மற்றும்  பக்காத்தான் ஹரப்பான் தலைவர்  மன்றத்தில்   வேட்பாளர் குறித்து  விரிவாக விவாதிக்கப்படும் என  அவர் தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற  தேர்தலில்  Kuala Kubu Baharu  சட்டமன்ற தொகுதியில் DAP யின்  Lee Kee Hion   4,119 பெரும்பான்மை வாக்குளில்  வெற்றி பெற்றார்.  கடந்த மார்ச் மாதம்  21 ஆம்தேதி   புற்றுநோயினால்    Lee Kee Hion  இறந்ததைத் தொடர்ந்து காலியான   Kuala Kubu Baharu  சட்டமன்ற தொகுதியில்  மே  மாதம் 11 ஆம்தேதி இடைத்தேர்தல்  நடைபெறவிருக்கிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!