Latestமலேசியா

Legoland கைவண்ணத்தில் மினிலாண்ட் பத்துகேவ்ஸ்

கோலாலம்பூர், பிப் 7 – முப்புறம் கடல் சூழ்ந்து, நாற்புறமும் செம்மையாய்ச் செழிப்புற்று உலக வரைபடத்தில் கடுகளவே தோன்றினாலும், உலகளவில் பல்லின மக்களால் பிரசித்தி பெற்றது நம் மலேசிய மலைத் திருநாடு. பல்லின மக்கள் வெவ்வேறு கலைக் கலாச்சாரங்களைக் கொண்டிருப்பினும் பிணக்கம் இன்றி இணக்கமாக இங்கு வாழ்வதை யாராலும் மறுக்க இயலாது. 

அவ்வகையில் மலேசியாவில் இந்தியர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடும் தைப்பூச திருவிழாவை சிறப்பிக்கும் வகையில் “Legoland” உருவாக்கிய மாடல் ஒன்று பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 

“Legoland” தைப்பூசத்தை முன்னிட்டு பத்துகேவ்ஸ்  கோவில் மாடலை, மினிலாண்ட் வடிவில் உருவாக்கி அனைவரையும் அசத்தியுள்ளது. அதன் வீடியோவில் மக்களும் பக்தர்களும் பத்துகேவ்ஸ் முழுவதும் இருப்பது போன்று சித்தரித்து வடிவமைத்துள்ளதை காணலாம்.

இந்த மினிலாண்ட் மாடல் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. அந்த வீடியோவின் கீழ் இந்தியர்கள் நன்றியும் பாராட்டுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!