Latestமலேசியா

LPT2 நெடுஞ்சாலையில் MPV வாகனம் காட்டு யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் தம்பதியினர் காயமடைந்தனர் 

சுக்காய், ஆகஸ்ட்.05- கிழக்குக்கரை நெடுஞ்சாலையான LPT2வின் 274.6-வது கிலோமீட்டர் பகுதியில் MPV வாகனமொன்று காட்டு யானைக் கூட்டத்தின் மீது மோதியதில் தம்பதியர் ஒருவர் காயமடைந்தனர். Cheneh டோல் சாவடியில் இருந்து வெளியேறும் பாதையில் நேற்றிரவு 10.20 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

அதில் Abdul Wahid எனும் 55 வயது ஆடவருக்கு இடது கையிலும், அவரது மனைவிக்கு வலது கையிலும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக கெமாமான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Mohd Razi Rosli தெரிவித்தார். சம்பவத்தின் போது அவர்கள் பஹாங், குவாந்தானில் இருந்து Kampung Pasir Gajahவில் உள்ள தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

Abdul Wahid தமது Toyota Estima வாகனத்தில் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, ​​அப்பாதையில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று காணப்பட்டது. அவை மிகவும் அருகில் இருந்ததால் அவரால் தவிர்க்க முடியாமல் அந்தக் காட்டு யானைக் கூட்டத்தின் மீது மோதியதாக Mohd Razi விளக்கினார்.

தகவல் கிடைத்து அங்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், காயமுற்ற தம்பதியருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவ்விருவரும் மேல் சிகிச்சைக்காக கெமாமான் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!