
ஷா ஆலாம், ஜூலை-22-புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஷா ஆலாம் வழித்தடத்திற்கான LRT3 இரயில் சேவையில், முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் முகம் பொறித்த முகமூடியை அணிந்தபடி அவரின் ஆதரவாளர்கள் சென்றது, பயணிகளின் கவனத்தை ஈர்த்ததோடு, சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.
கிள்ளான் பகுதிக்கு LRT திட்டத்தைக் கொண்டு வருவதில் நஜீப் ஆற்றிய பங்களிப்பையும் சேவைகளையும் நினைவுகூரும் வகையில் அவர்கள் இந்த வினோதமான முயற்சியை மேற்கொண்டனர்.
அக்குழுவினர் நஜீப்பி முகமூடியை அணிந்துகொண்டு இரயிலில் அமைதியாக பயணிப்பதும், நிலையங்களில் இறங்கி நடந்து செல்வதும் போன்ற வீடியோக்கள் தற்போது டிக் டோக் மற்றும் ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவி வருகின்றன.
இதனைப் பார்த்த சக பயணிகள் சிலர் ஆச்சரியத்துடன் அவர்களைப் புகைப்படம் எடுத்ததோடு, இணையவாசிகளும் “கிள்ளான் மக்களின் நீண்டகாலக் கனவான LRT திட்டத்தை அறிமுகப்படுத்திய தலைவரை மறக்காதப் பயணிகள்” எனப் பல்வேறு சுவாரசியமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.



