Latestமலேசியா

LRT கிளானா ஜெயா, அம்பாங் வழித்தட நிலையங்களில் ஆகஸ்ட் முதல் பாதுகாப்புத் தடுப்பு கதவுகள் அமைக்கும் பணி தொடக்கம்

ஷா ஆலாம், ஜூன்-29-கிளானா ஜெயா மற்றும் அம்பாங் வழித்தடங்களில் உள்ள LRT இரயில் நிலையங்களின் தளங்களில், பாதுகாப்புத் தடுப்பு கதவுகள் அமைக்கும் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என Prasarana நிறுவனம் அறிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இரயில் தண்டவாளங்களில் பொது மக்கள் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, Prasarana தலைமை செயலதிகாரி Amir Hamdan தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக, பயணிகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் குறிப்பிட்ட சில இரயில் நிலையங்களில் இந்தத் தடுப்புக் கதவுகள் பொருத்தப்படவுள்ளன.

அடுத்தக் கட்டம் இவ்வாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள ஷா ஆலாம் LRT3 இரயில் சேவையை பண்டார் உத்தாமா நிலையத்தில் இன்று நேரில் சென்று கண்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!