Latestமலேசியா

MH 370 விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடர்வீர் சீன பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை

பெய்ஜிங், நவ 28 – MH 370 விமானம் காணாமல்போய் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நெருங்கிவரும் இவ்வேளையில் அவ்விமானத்தை கண்டுப்பிடிப்பதற்காக தேடும் பணியை மீண்டும் தொடரும்படி அவ்விமானத்தில் பயணம் செய்த சீனப் பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்விமானத்தின் பயணிகளுக்கான இழப்பீடு குறித்த புதிய விண்ணப்பங்கள் மீதான விசாரணை பெய்ஜிங் நீதிமன்றத்தில் தொடங்கிய வேளையில் அந்த விமானம் காணாமல்போனது குறித்து புதிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு பயணச் சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் அந்த MH 370 விமானம் காணாமல்போனது. அந்த விமானத்தின் பயணிகளில் பெரும்பாலோர் சீனப் பிரஜைகளாவர். அந்த விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான போயிங் இயந்திர தயாரிப்பாளரான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) மற்றும் Allianz காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக சீனப்பயணிகளின் 40 குடும்பத்தினர் வழக்கு தொடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!