புத்ராஜெயா, ஆகஸ்ட் -19, Mpox என்றழைக்கப்படும் குரங்கம்மை நோய் உலகலாய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு நடவடிக்கையை சுகாதார அமைச்சு (KKM) வலுப்படுத்தியுள்ளது.
அவ்வகையில், mpox சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்ட நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும், இங்கு வந்திறங்கிய நாளிலிருந்து 21 நாட்களுக்கு சுய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
அதே சமயம், அபாயமுள்ள பகுதிகளுக்குச் சென்று வந்தவர்களில் யாருக்காவது தோலில் சொறி சிரங்கு, கொப்பளங்கள் தோன்றினால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
Mpox சந்தேகச் சம்பவங்களையும் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களையும், அனைத்து அரசாங்க தனியார் சிகிச்சை நிலையங்களும், மாவட்ட சுகாதார அலுவலங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதும் கட்டாயமாகும் என KKM கூறியது.
வாடிக்கையாளர்களுக்கு தோல் சார் சேவைகளை வழங்கும் spa, உடம்புபிடி போன்ற மையங்கள் சுகாதாரமாக இருப்பதும் உறுதிச்செய்யப்படுமென KKM கூறிற்று.
குரங்கம்மை நோயை உலகலாய சுகாதார அவசரநிலையாக WHO புதன்கிழமையன்று அறிவித்தது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் இந்த mpox நோயால் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.