Latestமலேசியா

MRT, LRT நிலையங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: வங்காளதேச வாலிபர் மீது 5 குற்றச்சாட்டுகள்

கோலாலாம்பூர், மே-6-கோலாலம்பூரில் உள்ள MRT மற்றும் LRT நிலையங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு கட்டுமானத் தொழிலாளியான வங்காளதேச ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

Md Romjan Ali எனும் 41 வயது அந்நபர் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் Chan Sow Lin, Maluri, Taman Midah ஆகிய நிலையங்களில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒரு ஜெர்மன் நாட்டு பெண் மற்றும் 4 உள்ளூர் பெண்களின் புகாரைத் தொடர்ந்து, ஏப்ரல் 27-ஆம் தேதி Maluri MRT நிலையத்தில் போலீசார் அவரைக் கைதுச் செய்தனர்.

இன்று கோலாலாம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அக்குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து, மொத்தமாக 6 மாத சிறை மற்றும் 15,100 ரிங்கிட் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!