
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 5 – போதைப்பொருள் கலந்த வேப் கார்ட்ரிட்ஜ்களை (katrij) தயாரித்து விநியோகித்த கும்பலை போலீசார் முறியடித்து, இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.
சோதனைகளில் 10.68 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதை வேப் கார்ட்ரிட்ஜ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ் விசாரணையில், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள ஒரு குடியிருப்பு வேப் கார்ட்ரிட்ஜ்களில் போதைப்பொருள் திரவத்தை நிரப்பி பொதி செய்யும் மையமாக பயன்படுத்தப்பட்டதும், இந்த கும்பல் கடந்த பிப்ரவரி முதல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 6.49 லட்சம் பேரால் தவறாக பயன்படுத்தப்படக்கூடியவை என போலீஸ் தெரிவித்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.



