Latestமலேசியா

Padu முதன்மை தரவு தளத்தில் மலாய்க்காரர் அல்லாதார் குறைவாக பதிவு செவதற்கு நம்பிக்கை குறைவா ? ரபிசி விளக்கம்

கோலாலம்பூர், மார்ச் 26 – PADU முதன்மை தரவு தளத்தில் மலாய்க்காரர்கள் அல்லாதார் குறைவாக பதிவு செய்ததற்கு அரசாங்கத்தின் நோக்கத்தின் மீது அவர்கள் நம்பிக்கை குறைவு காரணம் அல்ல என பொருளாதார அமைச்சர் Rafizi Ramli விளக்கம் அளித்தார். அரசாங்கத்திடமிருந்து மதாந்திர உதவியை பெறும் பழக்கத்தை பல பூமிபுத்தராக்கள் அல்லாதவர்களும் மலாய்க்காரர்கள் அல்லாவதர்களும் கொண்டிருக்கவில்லையென அவர் தெரிவித்தார். அதனால்தான் அவர்களில் பலர் அரசாங்க உதவித் திட்டத்தில் இடம்பெறவில்லை. அவர்களில் பலர் M40 மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானம் பெறும் தரப்பில் இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் Rafizi கூறினார்.

மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் PADU தரவு தளத்தில் பதிவு செய்த் தயங்குவதற்கு அவர்களுக்கிடையில் அதிக நம்பிக்கைக் குறைவு காரணமா என பெரிக்காத்தான் நேசனல் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் Ahamd Fadhli Shaari எழுப்பிய துணைக் கேள்விக்கு பதில் அளித்தேபோது Rafizi இத்தகவலை வெளியிட்டார். கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மத்தியில் PADU வில் குறைந்த எண்ணிக்கையிலான பதிவுகள் குறித்து கடந்த திங்கட்கிழமையன்று அமைச்சர் கவலை தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!