Latestமலேசியா

PADU பதிவு இலவசம் ; கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது

புத்ராஜெயா, மார்ச் 27 – பாடு தரவுத் தளத்தில், தங்கள் சுய விவரங்களை பதிவு செய்வதற்கும், புதுப்பிப்பதற்கும் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

அச்சேவைக்கு கட்டணம் விதிக்கப்படுவதாக கூறும் தரப்பினரிடம் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

padu.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக, ஒருவர் தனது சுய விவரங்களை இலவசமாக பதிந்து அல்லது புதுப்பித்துக் கொள்ளலாம் என, பொருளாதார அமைச்சு தமது முகநூல் பதிவு வாயிலாக கூறியுள்ளது.

அதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணம் செலுத்துமாறு கூறும் தரப்பினரை நம்பி பணத்தை விரையம் செய்வதோடு, தனிப்பட்ட தரவுகளையும் இழக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுதப்படுகிறது.

உதவி தேவைப்படுவோர், ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்படும், புள்ளியியல் துறையை அணுகலாம்.

பாடு தரவுத் தளத்தில் பதிந்து கொள்ள அரசாங்கம் வழங்கி இருக்கும் கால அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வருவதால், விரைந்து அதில் பதிந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!